Subscribe Us

header ads

நமது மக்களின் அபிலாஷைகள் !

பொதுத் தேர்தல் அண்மித்துக் கொண்டிருக்கிறது. நமது பிரதிநிதித்துவம் குறித்து தீராத வேட்கையுடனும், தணியாத தாகத்துடனும் முனைப்புக்கள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் நமக்கிடையே கருத்துப் பரிமாறல்கள் இடம் பெற வேண்டும்.

அவற்றுள் சிலவற்றை கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாகும்.

1. கல்வி,உயர் கல்வித் துறையில் மேலும் புரட்சிகரமான மாற்றங்கள், உயர்தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியல் கல்லூரி, கடற்றொழில், நீரியல் வள கல்விசார் நிலையங்கள், இதர தொழில் சார் நிறுவனங்கள்.

2. பிரதேச செயலகப் பிரிவு தோறும் தரமான முன்னணிப் பாடசாலைகளாக சிலவற்றை பரிணமிக்கச் செய்தல். அவற்றுக்கு தேவையான சகல பௌதீக,மனித வளங்களை பெற்றுக் கொடுத்தல். இதர பாடசாலைகளின் பௌதீக,மனித வளங்களை பெற்றுக் கொடுத்தல். வெற்றிடமாகவுள்ள சகல ஆளணியினர் நியமனம். கல்வி,உயர் கல்வி புலமைப் பரிசில்கள்,ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்,


3. அரச, தனியார் வேலை வாய்ப்புக்கள், வெளிநாட்டு வேலை வாய்ய்ப்புக்கள், சுயதொழில் வேலைத் திட்டங்கள், பயிற்சிகள்,சந்தை வாய்ப்புக்கள்.

4. பொருளாதாரத் திட்டங்கள், விவசாய, கால்நடை, கைத்தொழில்,கடற்றொழில்,தொழில் நுட்பம்,அபிவிருத்தி சார்ந்தவை. இவை மூலம் நேரடியான,மறைமுகமான தொழில் வாய்ப்புக்கள்.

5. அடிப்படை வசதிகளின் மேம்பாடு. வீடமைப்பு, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், தகவல் தொடர்பு, போக்குவரத்து, பாதை, வடிகாலமைப்பு. வீடமைக்க காணியற்றோருக்கு காணித் துண்டுகளை வழங்குதல், வீட்டு கடன் வசதிகள்,சமுர்த்தி கொடுப்பனவுகள்,உதவிகள், நிவாரணங்கள்.

6. விஷேட வெளிநாட்டு முதலீடுகள், அவற்றின் மூலம் தொழில் வாய்ப்புக்கள், வருமான ஈட்டல்கள். அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், நடை முறையில் உள்ளத் திட்டங்களை பூர்த்தி செய்தல். பிரதான நகரங்களின் துரித அபிவிருத்தி.

7. நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சமூக நலன்புரித் திட்டங்கள், விளையாட்டுத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள், இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களை வெளிக் கொணர திட்டங்கள்.

8. கலை, கலாசார, பண்பாடு விழுமிய மேம்பாட்டுத் திட்டங்கள். சமய, இன நல்லிணக்கத் திட்டங்கள்.

9. சிறுவர் நலன்புரித் திட்டங்கள், மகளிருக்கான பொருளாதாரத் திட்டங்கள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனர்கள், முதியோர், நலிவுற்றோர் ஆகியோருக்கான நலன்புரித் திட்டங்கள்.

10. அனர்த்த முகாமைத்துவ வேலைத் திட்டங்கள்.

இவை போன்று ஏராளம் உள்ளன. இவற்றைப் படிப்படியாக நிறைவு செய்வதற்கு சமூக ரீதியாக உள்ளார்ந்த செயற்பாடுகளுக்குப் புறம்பாக தேசிய மட்ட அரச, அரச சார்பற்ற பங்களிப்பும் இன்றியமையாதது.

-Mohamed Muhsi-

Post a Comment

0 Comments