Subscribe Us

header ads

வீரவன்ச மற்றும் அவரது மனைவியின் வயதுகள் அம்பலப்படுத்தப்படும்: ராஜித சேனாரட்ன


முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவன்ச ஆகியோரின் வயது விபரங்கள் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது.

இந்த விசாரணைகளின் பின்னர் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தமது வயதை குறைத்து போலியான ஆவணங்கள் மற்றும் போலிப்பெயரைப் பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments