Subscribe Us

header ads

மகிந்த முக்கியஸ்தர்களின் ஹெலிகப்டர் செலவு ரூ.30 மில்லியன்…


கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது, டிசம்பர் 1 முதல் ஜனவரி 9 வரையான காலப்பகுதியில் நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, தினேஸ் குணவர்தன உட்பட சிராந்தி ராஜபக்சவும் சேர்ந்து ரூ.30 மில்லியன் ஹெலிகப்டர் பாவனைச் செலவை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் நாமல் ராஜபக்ச ரூ.15 மில்லியனுடன் முதலிடத்திலும், விமல் வீரவன்ச ரூ. 5.8 மில்லியன் செலவோடு இரண்டாமிடத்திலும் , பசில் ராஜபக்ச 4.8 மில்லியனுடன் மூன்றாமிடத்திலும் சிராந்தி ராஜபக்ச தனது பங்குக்கு ரூ2.2 மில்லியன் செலவுடன் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
குறித்த விமானப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் நிலுவையிலேயே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments