Subscribe Us

header ads

தங்காலையில் 10 வருடங்களுக்கு பின்னர் கூட்டம் நடத்திய ஜே.வி.பி


பத்து வருடங்களுக்கு பின்னர் தங்காலை பிரதேசத்தில் ஜே.வி.பி நேற்று பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியதாக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரான தங்காலையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை மாற்ற ஜே.வி.பி பாரிய பங்களிப்பை வழங்கியது.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து நாடு முழுவதும் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாந்தோட்டையில் காணப்பட்ட நிலைமை என்ன?. இந்த மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட இடமளிக்கப்படவில்லை.

தங்காலை நகரில் வேறு எவருக்கும் கூட்டங்களை நடத்த இடமளிக்கப்படவில்லை, ஒட்டு கேட்கப்படும் என்று தொலைபேசியில் இருந்து மற்றைய தொலைபேசிக்கு பேசவும் மக்கள் பயந்தனர், ஊடகவியலாளர் எழுத பயந்தனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments