ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளால் வெளிநாடுகளில் ஓளித்துவைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் இவ்வாரம் ஆரம்பமாகின்றன.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி வெலியமுனவும் இவ்வாரம் இது தொடர்பாக உலகவங்கியின் திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் பிரிவினருடன் வாசிங்டனில் இருவரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக இருவரும் சனிக்கிழமை அமெரிக்கா பயணமாகியுள்ளனர்.
பெப்ரவரி 12 ம் திகதி அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியை சந்திப்பதே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் முக்கிய நோக்கமாக காணப்பட்டாலும்,அவர் இந்த சந்திப்பை பயன்படுத்தி வெளிநாட்டுகளில் சொத்துக்களை பதுக்கியுள்ளவர்களின் விபரங்களை உலகவங்கி அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பின்போது பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
அடுத்த வாரமளவில் வொஸிங்டனுக்கு அரசாங்க மற்றும் ஊழல் ஒழிப்பு பிரதிநிதிதிகள் விஜயம் செய்ய உள்ளனர்:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் சொத்துக்களை கண்டு பிடிக்க விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்து அவற்றை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை கண்டு பிடிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக அடுத்த வாரமளவில் வொஸிங்டனுக்கு அரசாங்க மற்றும் ஊழல் ஒழிப்பு பிரதிநிதிதிகள் விஜயம் செய்ய உள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் தலைவர் ஜே.சீ வெலியமுன ஆகியோர் வொஸிங்டனில் இந்த விசாரணைகளை நடத்த உள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை கண்டு பிடிக்கும் உலக வங்கியின் பிரிவுடன் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
வெளிவிவகார அமைச்சர் சமரவீர, பிரதானமாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திக்கவே வொஸிங்டன் விஜயம் செய்ய உள்ளார்.
வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை பேணி வரும் கடந்த அரசாங்க முக்கிய புள்ளிகள் பற்றிய பட்டியலை வழங்கி அவர்களின் சொத்து விபரங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சி வெற்றியளித்தால் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் பற்றிய சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


0 Comments