ஜேர்மனியில் ஆண் செவிலியர் ஒருவர் 200 நோயாளிகளை கொன்ற சம்பவம் அந்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த நீல்ஸ் எச்(Nils H) என்ற நபர் டெல்மன்ஹோர்ஸ்ட்(Delmenhorst) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண் செவிலியராய் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு தானும் மருத்துவராய் திகழ வேண்டும் என்ற ஆசை மனதில் நீண்ட நாட்களாய் இருந்துள்ளது.
எனவே மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சைகளை தீவிரமாக கவனித்து வந்த இவர், அதேபோல் சிகிச்சைகளை நோயாளிகளிடம் ரகசியமாக செய்துள்ளனர்.
ஆனால் இவர் அதிகமான சக்தி வாய்ந்த ஊசிகளை நோயாளிகளுக்கு செலுத்தி வந்துள்ளதால், அடுத்தடுத்து பல நோயாளிகள் இறந்துள்ளனர்.
அப்போது இவர் மீது சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் இவரை கண்காணித்து வந்துள்ளது.
இதன்பின் இவரால் சுமார் 200 நோயாளிகள் கொல்லப்பட்டதை கண்டுபிடித்த மருத்துவர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார், இவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.





0 Comments