Subscribe Us

header ads

12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை.... காமக்கொடூரனுக்கு கிடைத்த சரியான தண்டனை...


கேரளாவில் தந்தை ஒருவர் தனது 12 வயது மகளை 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கியதற்காக கொல்லம் நீதிமன்றம் சாகும்வரை கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொல்லம் அருகே அரைக்கல் பகுதியை சேர்ந்த பொடிமோன் (40) என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2010ல் பொடிமோனின் மனைவி கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால் 3 மகள்களையும் அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.

தனது 12 வயதான மூத்த மகளை வாரத்திற்கு ஒரு முறை தனது வீட்டிற்கு பொடிமோன் அழைத்து வந்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்ததால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்தவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து இதுகுறித்து கொல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் பொடிமோன், 3 ஆண்டுகளாக தனது மூத்த மகளை பலாத்காரம் செய்தது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொல்லம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்மேனன், மகளை பலாத்காரம் செய்த பொடிமோனுக்கு சாகும் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments