Subscribe Us

header ads

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் கே.என்.சொக்ஸி இன்று காலமானார்.


1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி பிறந்த கே.என்.சொக்ஸி, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சராகவும், சட்ட வல்லுனருமாக செயற்பட்டுள்ளார்.

சொக்ஸி புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

93-94ம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

2002ம் ஆண்டு ரணில் பிரதமராக பதவி வகித்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக சொக்ஸி கடமையாற்றியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட சொக்ஸி, 2010ம் ஆண்டு வரையில் நாடாளுமன்றில் அங்கம் வகித்து வந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments