Subscribe Us

header ads

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி! மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை!!

எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு செயற்படுவோம். இந்நிலையில், மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லப்படும்.

என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,ஐக்கிய தேசிய கட்சியினருக்கும், ஹெல உறுமய,சரத் பொன்சேகாவின் கட்சிக்கும். அகில இலங்கைக் மக்கள் காங்கரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன், ஜே.வி.பியினருக்கும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் இந்த நடவடிக்கையில், ஊழல் மோசடிகளை ஒழித்து, நாட்டுக்காக பாடுபடும் அரசியல் தலைமைகளை உருவாக்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்.

Post a Comment

0 Comments