Subscribe Us

header ads

மாற்றத்தின் புதியதோர் தோற்றம் - சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்

இந்த நாட்டின் நல்லாட்சியை நோக்கிய பயணத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக முதன் முதல் காலடி வைப்பதற்கு , எனது உள்ளத்தில் நல்லெண்ணத்தை ஏற்படுத்திய வல்லவன் அல்லாகுவுக்கு முதற் கண் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் .

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து சிறுபான்மையினரின் நலன் காக்க வந்துதித்து இன்று வெற்றி வாகை சூடிய இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி கௌரவ மைத்ரி பால சிறிசேன அவர்களை ஆதரித்த முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சந்தோசத்தோடும் , ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளர் என்ற வகையிலும் வன்னி மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மனநிறைவை அடைகிறேன்.

அத்துடன் வன்னி மாவட்டத்திலும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இருந்தும் இப்பயணத்திட்கு எல்லா வகையிலும் உதவிகள்,ஒத்தாசைகள் பல புரிந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய கௌரவ மைத்திரி பால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக பல்வேறு வகையிலும் பாடுபட்டு உழைத்த ,வாக்களித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் .
குறிப்பாக இந்த கத்திமுனை பயணத்தில் எனக்கு தோள் கொடுத்து துணை நின்று என் கரத்தை பலப்படுத்தி,எனக்காகவும் இந்த சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காகவும்,இந்த நாட்டின் நல்லாட்சியை வேண்டி பிரார்த்தனை செய்த பெரியோர்கள் ,நண்பர்கள் உட்பட அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமது மத கலாச்சார விழுமியங்களை பின்பற்றி மலர்ந்துள்ள ஆட்சியில் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டுமென ...அனை வருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ...
ஹுனைஸ்‬ பாரூக் (பா .உ) 
வன்னி மாவட்டம்

Post a Comment

0 Comments