வடக்கு கிழக்கு, மலையகம் உள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ் வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூர்த்தி திவிநகும சகல நடவடிக்கைகளும் சமமாக பங்கீட்டு அப்பிரதேச அபிவிருத்திகள் நடைபெற வேண்டும். என புதிய அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 24 மாவட்ட முகாமையாளர்கள், சமூர்த்தி அதிகார சபைகளின் சகல முகாமையாளர்கள்களை நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
எனது அமைச்சின் கீழ் வருகின்ற எந்தவொரு அதிகாரியும் இனப்பாகுபாடு, அபிவிருத்தியில் இலஞ்சம், தாமதம் என்ற வகையில் எனக்கு முறைப்பாடுகள் கிடைப்பின் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
என்னோடு வேலை செய்வதற்கு காலை 08 .30 பி.பகல் 04.30 என்ற அலுவலக நேரத்தை கடைப்பிடிக்க வேண்டாம்.
நேற்று இரவு நான் கடமையேற்று 11.30 இரவு 12.00 மணிவரையும் அமைச்சில் இருந்து மக்களை சந்தித்தேன். இன்று காலை 8 மணியுடன் உங்களை சந்திக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments