பைஷல் இஸ்மாயில் -
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட திவிநெகும வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
திவிநெகு திணைக்களத்தின் ரூபா 15 இலட்சம் நிதியொதுக்கீட்டின் மூலம் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூபா 10,000 பெறுமதியிலான 3,000 கோழிக் குஞ்சுகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
திவிநெகு கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மிருக வைத்திய அதிகாரி எம்.ஏ.நதீர், தலமைப்பீட திவிநெகும முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லீம் மற்றும் திவிநெகும அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




0 Comments