Subscribe Us

வாரந்தோறும் கணவனுக்கு 50 கசையடி.... கண்ணீர் விட்டு கதறும் மனைவி!


சவுதியில் நபர் ஒருவருக்கு வாரந்தோறும் 50 கசையடிகள் வழங்கப்பட்டு வருவது அவரது மனைவியை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சவுதியில் வாழ்ந்து வரும் ரைப் படாவி(Raif Badawi) என்ற நபர் இணையத்தில் இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்களை பதிவு செய்ததாக கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 கசையடிகளும் தண்டனையாக விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு மொத்தம் 1000 கசையடிகள் தரப்படும் என்றும், அதை ஒவ்வொரு வாரமாய் பிரித்து வாரத்திற்கு 50 கசையடிகளாய் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
ரைப் படாவின் மனைவி Ensaf Haidar மற்றும் மூன்று குழந்தைகள் கனடாவில் உள்ள கியூபெக்(Quebec) மாகாணத்தில் அகதிகள் முகாம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
கணவர் அனுபவிக்கும் கொடுமையை தாங்க முடியாத மனைவி இதுகுறித்து வலைப்பதிவில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, என் கணவருக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் கொடூரமானது என்றும், இது ஒரு குற்றச்செயல் எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.







Post a Comment

0 Comments