முஹாஜிரீன்
மைத்திரிப்பால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யபட்டதையொட்;டி பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் அனுசரணையுடன் சின்னப்பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைக் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது.
சின்னப்பாலமுனை கிளைக் குழுவின் தலைவரும் சனசமூக நிலையத்தின் தலைவருமான பி.எம். பசீர் தலைமையில் ‘மைத்திரி யுக நல்லாட்சிக்கான அரம்பம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் சின்னப்பாலமுனை கிளைக் குழுவின் செயலாளர் ஏ.எம். பைசால் உட்பட அங்கத்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சின்னப்பாலமுனை சுகாதார நிலைய வளாகத்தையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்தனர்.
புதிய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவின் வெற்றிக் கொண்டாட்டங்களை வீணாண முறையில் கொண்டாடுவதைத் தவிர்த்து நல்ல விடயங்களைச் செய்வதற்கான வாய்ப்பாக இவ்வெற்றிக் கொண்டாட்டங்களை மாற்றி முன்மாதிரியான முறையில் கொண்டாடுவதற்காகவே இச்சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.








0 Comments