பாடசாலையிலிருந்து இடைவிலகி வறுமை கோட்டிற்கு மத்தியில் வாழ்ந்து வரும் மாணவர்களுக்கு தொழில்சார் பயிற்சி நெறிகளுக்கான புலமைப் பரிசிலை வழங்கி, அவர்களையும் சமூகத்தில் தகைமைப்பெற்ற துறைசார் உத்தியோகத்தர்களாக மாற்றுவதன் ஊடாக உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ சிறந்த சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கில் Puttalam Association Qatar - PAQ அமைப்பினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் அன்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
PAQ அமைப்பின் பூரண அனுசரனையுடன் புத்தளத்தில் இத் திட்டத்தினை Puttalam Human Development (PHD) அமைப்பு செயற்படுத்துகின்றது.
அதற்கமைய முதல் தொகுதி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் வைபவம் 2015.01.24 சனிக்கிழமை PHD காரியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் PAQ அமைப்பு சார்பாக சகோதரர் ரிஸ்வி மற்றும் இர்ஸாத் அகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்தும் PAQ அமைப்பின் அனுசரனையின் கீழ் இத் தொழில்சார் கல்விக்கான புலமைப் பரிசில் வழங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே தொழில்சார் கற்கை நெறியை தொடர விரும்பும் மாணவர்கள் PHD-யுடன் தொடர்புகொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
Mohamed Jahas - 077 567 8902
Mohamed Najath - 077 722 2842
நன்றி -The Puttalam Times-


0 Comments