Subscribe Us

header ads

ITN தொலைக்காட்சியிடம் 1000 மில்லியன் நஷ்ட ஈடு கோரி பொது வேட்பாளர் கடிதம்

தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஆதாரமற்ற, திரிபுபடுத்தப்பட்ட, பொய்யான செய்திகளையும் வர்ணணைகளையும் ஒளிபரப்பி வரும் சுயாதீன தொலைக்காட்சியிடம் ரூ.1000 மில்லியன் மான நஷ்ட ஈடு கோரி பொது வேட்பாளர் தனது சட்டத்தரணி நாமல் ராஜபக்ச ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 30ம் திகதி இரவு செய்திகளின் போது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பொய்யான தகவல்களும் ஏனைய நேரங்களிலும் ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு தன் மீது சேறுபூச விளையும் குறித்த தொலைக்காட்சி சேவையின் செய்தி ஆசிரியர் உட்பட நிர்வாகிகளும் இக்கடிததத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments