Subscribe Us

header ads

“அரச சொத்துக்கள் எதனையும் தனியாருக்கு விற்காத ஓரே ஜனாதிபதி நான்” – ஜனாதிபதி மஹிந்த

அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தவொரு சொத்தையும் தனியார் துறைக்கு விற்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
இலங்கை காப்புறுதிக்
கூட்டுத்தாபனம், ஆசிய ஹோட்டல் கூட்டுத்தாபனம், இலங்கை செல் எரிவாயு, ஶ்ரீ லங்கா ரெலிக்கொம் மற்றும் ஏயர் லங்கா ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவே தனியார் துறையினருக்கு விற்பனை செய்ததாக ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.

செவனகல சீனித்தொழிற்சாலை, லங்கா மில்க்புட், செவனகல பலவத்தை சீனித்தொழிற்சாலை ஆகியவற்றை மீண்டும் அரசாங்கத்திற்கு கையகப்படுத்தியது தாமே என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அரச சொத்துக்களை விற்காத ஒரே ஜனாதிபதி தான் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments