Subscribe Us

header ads

சர்வதேச அழுத்தங்களுக்கு பணியாமல் மகிந்த புலிகளை பூண்டோடு படுகொலை செய்தார்: அமைச்சர் ஹிஸ்புல்லா


சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் அவைகளுக்குப் பணியாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பூண்டோடு படுகொலை செய்ததாக அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். 

கிழக்கில் காத்தான்குடியில் நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து இரவு பகலாக யுத்தம் செய்தாகவும் அவர் குறிப்பிட்டார். 

அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்த போது எந்த அழுத்தங்களுக்கும் செவிசாய்க்காமல் யுத்தத்தை தொடர்ந்தாகவும அவர் கூறினார். 

அமெரிக்க ஜனாதிபதியுடைய தொலைபேசியைக் கூட இரண்டு நாட்கள் பதிலளிக்காமல் அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். 

பிரபாகரனையும் கொலை செய்து, முழு இயக்கத்தையும் படுகொலை செய்தார். பூண்டோடு ஒழித்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அதனால்தான் இன்று தாம் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் நிம்மதியாக வியாபாரம் செய்வதாகவும்  பறிபோன கிராமங்களில் மீண்டும் குடியேற முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments