Subscribe Us

header ads

புத்தளம் நகரில் மீண்டும் அடிதடி !! PPAF உறுப்பினர்கள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி – பெரும்பரபரப்பு

sandai

இன்று நண்பகல் முதல்  புத்தளம் மக்களை  வாக்களிக்ககொரும் துண்டுப்பிரசுரங்களை  விநியோகித்துக் கொண்டிருந்த புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வுக்  குழுவினர் மீது  மீண்டும் நகர மத்தியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வுக்  குழுவினர் ( PPFA ) துண்டுப்பிசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போதே மறுமுனையில் ஆளும் கட்சியின் சார்ப்பில் விநியோகித்துகொண்டிருந்த  ஒரு குழுவினர்  புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வுக்  குழுவினர்  கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாக  சம்பவத்தை நேரில் கண்ட பலரும் புத்தளம் டுடேக்கு தெரிவித்தனர்.

sandai 2

இத்தாக்குதலில் காயமுற்ற புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வுக்  குழுவைச் சேர்ந்த  ரியாஸ் , முஸ்ரிப் , ருஸ்தி உற்பட ஐவர் புத்தளம் தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே  சம்பவத்தைக் கேள்வியுற்ற  புத்தளம் பொலீசார் ஸ்தலத்துக்கு வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sandai 3










இதே நேரம்  இந்த அக்கிராமத்தில் ஈடுபட்டவார்கள் நகர சபை தலைவரின் ஆதராவாளர்கள் என்று ppaf உறுப்பினர் ஒருவர் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு  விகாயம் செய்த நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் தனது ஆதரவாளர்களை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றிய மேலதிக விஷயங்கள் பின்னர் வெளிவரும்.-Puttalam today-

Post a Comment

0 Comments