முசலி இளைஞர் ஒன்றியத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் மாவட்டம் முசலி கோட்டத்தில் அமைந்துள்ள பொற்கேணி பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்குமான புத்தகப்பை வழங்கி வைக்கும் நிகழ்வு வருகின்ற திங்கட்கிழமை 26-01-2015 காலை 10.30 மணி அளவில் இடம்பெற உள்ளது.
அனைத்து மாணவர்களுக்குமான அப்பியாசக் கொப்பிகள், கற்றல் உபாகரனங்கள் புத்தகப்பை மற்றும் சில மாணவர்களுக்கு கல்வி உதவி கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட உள்ளன. இந்நிகழ்வுக்கு முசலி இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் அரபாத் காசிம் அவர்கள் தலைமை வகிப்பதோடு பிரதம அதிதியாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் எம். எம். எம். சியான் அவர்களும் கெளரவ அதிதியாக முசலி கோட்டைக் கல்வி பணிப்பபாளர் எ. எஸ். ஜுனைட் அவர்களும் பங்குபற்றுகிறார்கள்.
பொற்கேணி பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொள்ளும் அஷ்ஷெய்க் நிஹ்மதுல்லாஹ் நளீமி அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான உரையும் ஆற்ற உள்ளார்கள்.


0 Comments