Subscribe Us

header ads

ஜனாதிபதி காரியாலயத்திற்கு சொந்தமான 53 வாகனங்கள் விற்பனை நிலையத்தில் கைப்பற்றல்!

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான  53 வாகனங்கள் விற்பனை நிலையங்களில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்குரிய சுமார் 53 வாகனங்கள் புறக்கோட்டை ஸ்ரீஜயவர்த்தனபுர பல்பொருள் கூட்டுறவு நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் நடாத்தி செல்லப்பட்ட வாகன விற்பனை நிலையத்தில் கைப்பற்றியுள்ளதாக மிரிஹானை பொலிஸ் நிலையத்தை மேற்கொள் காட்டி பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவற்றுள் 13 ஜீப் வண்டிகள், 33 ஊருருளிகள், 2 சிற்றூர்திகள் 2 கெப் ரக வாகனங்களும் அடங்குகின்றது.

Post a Comment

0 Comments