சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஸிஸ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லாஹ் சிகிச்சை பலனின்றி தனது 92 ஆவது வயதில் காலமானார்.
அப்துல்லாஹ்வின் மறைவையடுத்து அவரது சகோதரார் சல்மான் பின் அப்துல்லாஸிஸ் மன்னராக கடமைகளை பொறுப்பேற்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி பிறந்த அப்துல்லாஹ் 2006 ஆம் ஆண்டுமுதல் சவூதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments