Subscribe Us

header ads

மகாத்மா காந்தி உலகிற்கு கிடைத்த அரிய பரிசு!


மகாத்மா காந்தி உலகிற்கு கிடைத்த அரிய பரிசு என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். 

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ள ஒபாமா, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை ஒருமுறை வலம் வந்த ஒபாமா, மலர் தூவினார். 

அதனைத் தொடர்ந்து அரச மரக்கன்று ஒன்றையும் ஒபாமா நட்டார். பின்னர் அங்குள்ள விருந்தினர்களுக்கான புத்தகத்தில், மகாத்மா காந்தி பற்றிய தனது கருத்தை ஒபாமா பதிவு செய்தார். 

காந்தியைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் அன்று சொன்னது இன்றும் மாறாமலேயே தொடர்கிறது என்றும் இந்தியா முழுவதும் காந்தியைப் பற்றிய உணர்வு இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றும் ஒபாமா தனது குறிப்பில் எழுதினார். 

கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த போதும் காந்தி நினைவிடத்தில் ஒபாமா மரியாதை செலுத்தினார்.

Post a Comment

0 Comments