Subscribe Us

header ads

அக்குரனையின் கல்விக்காக உண்மையாக உழைக்கும் எமது சகோதரர்களுக்கு உதவியாய் இல்லாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்போம்.

-AKURANA NAZLAN-

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தை விட்டு மிக தூரம் சென்றிருந்த ஒரு விடயம் தான் கல்வி அதிலும் அக்குரணை மக்கள் கல்வி விடயத்தில் மிக பொடுபோக்காக இருந்த காலம் மாறி தற்போது பணமிருப்பவர்கள் தனியார் பாடசாலைகளில் சேர்ப்பது குறைந்து அரச பாடசாளைகளை நாடிவருவதை பார்க்கும் போது நமது சமூகத்தின் கல்வி சற்று முன்னேற்றம் அடைந்ததாகவே கருத முடிகிறது,

எந்த ஒரு அடிப்படை வசதியற்ற கூளி தொளிலாளி கூட பெரும் பணக்காரர்களுடன் போட்டி போட்டுகொண்டு தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க முனைவதை பார்க்கும் போது மகிழ்ச்சியளிகிறது,

அதே சமயம் கல்வி கற்கும் பாடசாலையின் நிலைகளை பார்த்தால் அதிலும் அக்குரனையின் முக்கிய பாடசாலையான அஸ்கர் பாடசாலையில் அடிக்கடி அதிபர்களை மாற்றுவதும், விரட்டுவதும் வாடிக்கை SDC, OBA போன்ற அமைப்புக்கள் அதிபருக்கு கீழே தான் இயங்க வேண்டும், ஆனால் அக்குரனையில் இந்த அமைப்புக்களுக்கு கீழே அதிபர் இயங்க வேண்டி இருப்பது ஒரு துர்பாக்கிய நிலை தான்.

பாடசாலையில் நிரந்தர அதிபர் ஒருவர் இல்லாமல் அடிக்கடி மாறுவதனால் அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒழுக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது, எந்த ஒரு பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் குறைகிறதோ அப்பாடசாலையின் கல்வித் தரம் கீழ்மட்டத்திற்கு சென்று விடும் அது தான் தற்போது எமது பாடசாலையின் நிலையும் (மேலதிக தகவலாக அஸ்கர் பாடசாலை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு பெரும் உணவகங்களில் Party எல்லாம் கொடுகிறார்கலாம் பிறகு எப்படி பாடசாலைக்குள் கட்டுப்பாடு வரும்? இதைகேட்டா இதில் என்ன தப்பு என்றும் கேட்கிறார்கள்?

இதற்கு முற்றிலும் மாற்றமாக குருகொடை சந்தியில் இயங்குகிறது அஸ்கர் மாதிரி ஆரம்ப பாடசாலை, இப்பாடசாலைக்காக அயராது உழைக்கும் அதிபர் SDC , OBA மற்றும் பெற்றோர்கள் அனைவரது முயற்சியாலும், ஆரம்பித்து சில வருடங்களுக்குள்ளேயே அக்குரனையின் சிறந்த ஆரம்ப பாடசாலையாக வலம் வருகிறது, இப்பாடசாலையை பார்த்து ஏனைய ஊர்களில் கீழ் மட்டத்தில் இருந்த சிறிய பாடசாலைக்கு உயிர் வந்ததை போன்று நமக்கு ஏன் எமது பாடசாலையையும் Azhar Model Primary பாடசாலை மாதிரி முன்னேற்ற முடியாது என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு அவர்களும் இப்பாடசாலையை முனமாதிரியாக எடுக்கும் அளவிற்கு இப்பாடசாலை உயர்ந்திருக்கும் அதே வேலை இப்பாடசாலைக்கு பல்வேறு இன்னல்களும் தொல்லைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளது என்பது கவலையளிக்கிறது,

கடந்த காலங்களில் பல்வேறு தொல்லைகள் வந்தாலும் சில வாரங்களுக்கு முன்பு புதிய மாணவர் அனுமதி விடயத்தில் வலயக்கல்வி அதிகாரிகள் விட்ட சிறு பிழையை ஊதிப் பெரிதாக்கி பாடசாலைக்கு சம்மந்தமே இல்லாத ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு வந்து பாடசாலையில் அநாகரீகமாக நடந்ததும் இல்லாமல் அதை நியாய படுத்தும் வகையில் கடந்த வெள்ளிகிழமை பாடசாலை மீது அதிருப்தி வரும் வகையில் துண்டு பிரசுரம் வெளியிட்டிருக்கும் இவர்களது நோக்கம் தான் என்ன அக்குரனையில் ஒரு நல்ல பாடசாலை உருவாவதில் விருப்பம் இல்லையோ என்று தோனுகிறது

ஒவ்வொரு நிர்வாகத்திடமும் ஒவ்வொரு பிழை இருக்கும் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதனை சுட்டிக்காட்டுவதற்கு நல்ல நாகரீகமான முறைகள் உள்ளது தயவு செய்து எங்களது சமூக முன்னேற்றத்திற்கு (துஆ விற்கு பிறகு) இரண்டாவது ஆயுதமாக இருக்கும் கல்வியை முன்னேற்றுவதற்கு நாம் ஒன்றிணைவோம் மாற்றமாக அநீதியை கண்டு பொங்குகிறோம் என்று நினைத்து நம்மீது நாமே சேற்றை பூசிகொள்வதில் நியாயம் இல்லை

அக்குரணை மக்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள் நான் அறிந்த வகையில் ஒன்றுக்குமே உதவாமல் இருந்த இப்பாடசாலையை நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு அதிபர் SDC , OBA மற்றும் பெற்றோர்கள் எல்லோரும் இனைந்து நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் நம்மால் அரை மணி நேரம் ஒதுக்கி நமது பிள்ளைக்காக பெற்றார் கூட்டத்திற்கு கூட போக முடியாமல் இருக்கும் நிலையில் தங்களது அதிக நேரத்தை ஒதிக்கி இப்பாடசாளைக்காக பாடுபடும் அதிபர் SDC போன்றவர்களுக்காக நாம் குரல் கொடுப்போம்

Post a Comment

0 Comments