Subscribe Us

header ads

இந்தியாவின் 66-வது குடியரசு தினம் இன்று!


இந்தியாவின் 66-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொள்கிறார். 

முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், டெல்லி முழுவதும் வரலாறு காணாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையிலான ராணுவ அணிவகுப்பும், வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. 

மேலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும், பல்வேறு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இதில் பங்கேற்க உள்ளன. அதோடு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. 

இதேபோல், சென்னையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில் ஆளுநர் ரோசைய்யா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். மேலும், பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசுத் துறைகளின் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments