Subscribe Us

header ads

புத்தளம் தேர்தல்தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிக்கு மும்முனைப்போட்டி...


நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் அமைப்பாளர் என்று வெளியான  செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான டாக்டர் ஐ.எம் .இல்யாஸ்.

நான் ஜனாதிபதி வேற்பாளர் ஆனவுடன்  உடனடியாக நீங்கள் மைத்திரிக்கு வேலை செய்யுங்கள்  என்று எனக்கு சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமித்தார். இன்று வரை நானே அமைப்பாளர். எமது ஜனாதிபதி மைத்திரி அவர்கள்  அனைத்து சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களையும்  தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையே சகோதரர் பாயிஸ்  தவறாக புரிந்து தன்னை அமைப்பாளராக பிகடனப்படுத்துகிறார் என்றார்.

இந்த தேர்தலில் முழுக்க முழுக்க மஹிந்த ராஜபக்சவுக்கு வேலை செய்து விட்டு அவர் தோற்றவுடன் நான் தான் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.

இதே வேளை ஆளும் மைத்திரி அரசின் கீழ் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிக்கு போட்டியிடும்  தற்போதைய அமைப்பாளர் கே. .பாயிஸ் , முன்னாள் அமைப்பாளரும் மாகாண சபை அமைச்சருமான  எம்.எச். நவவி ஆகியோருடன் அப்பதவிக்கு எனக்கு ழங்கபட்டுவிட்டது என கூறும் டாக்டர் இல்யாசும்  போட்டி இடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments