18 May 2012
திட்டமிட்டு நடாத்த பட்ட கொலை விசாரிக்காமல் விபத்து என்று கோப்புகளை மூடிவிட்டார்கல் காரணம் பெரிய இடத்து சம்பந்தம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிறந்த வீரர் மரணத்திற்கு நீதி கேற்போம்
நாரஹேன்பிட்டியில் நடந்தது என்ன -
பிரபல ரக்பி விளையாட்டு வீரரான மொஹம்மட் வஸீம் தாஜுதீன் வாகன விபத்தில் காலமானார்.
எரிந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றிலிருந்து வீரர் தாஜுதீன் கருகிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட் டுள்ளார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள பார்க் வீதியில் விபத்துக்குள்ளாகி எரிந்த நிலையில் காணப்பட்ட காரிலிருந்தே நேற்று அதிகாலை அவரின் சடலம் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
வேகமாக வந்த கார் பார்க் வீதியிலுள்ள மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதால் தீ பற்றியிருக்கலாம் என்றும் அதில் அந்த காரை செலுத்திய மொஹம்மட் தாஜுதீன் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என்றும் பொலிஸார் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தாஜுதீன் பிரபல ரக்பி விளையாட்டு வீரராவார். இவர் பாடசாலை மற்றும் தேசிய விளையாட்டு அணியில் விளையாடி வந்துள்ளார்.
சென்தோமஸ் கல்லூரியின் முதல் நிலை ரக்பி அணிக்காக விளையாடிய தாஜுதீன் 2003 ஆம் ஆண்டில் கல்லூரி அணியின் உப தலைவராக செயல் பட்டார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு தெரிவான அவர் 2008 ஆம் ஆண்டு சர்வதேச ஹொங்கொங் ரக்பி செவன் அணிக்காக விளையாடினார். கடந்த 2009 ஆம் ஆண்டு பார்க் கழக அணியில் இணைந்த தாஜுதீன் ஆண்டின் சிறந்த ரக்பி வீரராகவும் தெரிவானார்.-ABDUL WAHID-


0 Comments