குறைந்த வாக்குப் பலம் கொண்டவர் பிரதமராகவும், கூடுதல் வாக்குப் பலம் கொண்டவர் எதிர்கட்சியிலும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவரது சொந்த ஊரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த முன்னால் ஜனாதிபதி;
சிலர் கூறினார்கள் நான் தோற்றவுடன் வெளிநாட்டு சென்றுவிட்டதாக, இன்னும் சிலர் கூறினார்கள் வெளிநாட்டு செல்வதாக, கட்டுநாய விமான நிலையத்தை மூடுவதாக, மாத்தளை விமான நிலையத்தை மூடுவதாக, என்றாலும் அவற்றை மூடத் தேவையில்லை. நாம் இருக்கிறோம், எதற்காகவும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன். நான் இந்த தாய்நாட்டில் தான் மக்களோடு வாழ்வேன்.

நாட்டில் மாற்றோம் ஒன்றையே அவர்கள் கேட்டனர், தற்பொழுது அந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது, நான் ஓரமாகியது நல்லது. என்றாலும் தற்பொழுது பாராளுமன்றத்தில் கூடுதல் வாக்குப் பலம் எமக்கே உள்ளது, சாதாரணமாக ஜனநாயக நாட்டில் கூடுதல் வாக்குப் பலம் உள்ள கட்சிக்கே பிரதமர் பதவி வழங்கப்படும். என்றாலும் இங்கு குறைந்த வாக்குப் பலம் கொண்டவர் பிரதமராகவும், மேலதிகமாக 137 வாக்குகள் கூடுதலான வாக்குப் பலம் கொண்டவர் எதிர்கட்சியியிலும் காணப்படுகிறனர்.

0 Comments