Subscribe Us

header ads

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளால் மட்டுமா மைத்திரி வெற்றி பெற்றார்?: சம்பிக்க ஆதங்கம்

சிங்கள மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கவில்லை என்ற பிழையான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் முஸ்லிம் வாக்குகளின் மூலம் தேர்தலில் வெற்றியீட்டியதாக பிழையான தர்க்கமொன்றின் ஊடாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

இந்த பிழையான பிரச்சாரத்தினை ஜாதிக ஹெல உறுமய கட்சி எதிர்க்கின்றது.

வடக்கு கிழக்கு வாக்குகளின் மூலம் மைத்திரிபாலவின் வெற்றி உறுதியானது என்ற தர்க்கத்தை சிலர் முன்வைக்க முயற்சிக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளின் ஊடாக மைத்திரிபால பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகளில் 12 வீதமான வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளது.

நாட்டின் 88 வீதமான சிங்கள மக்களும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments