Subscribe Us

header ads

சனத் ஜயசூரிய இன்னமும் வாகனங்களை ஒப்படைக்கவில்லை

முன்னாள் பிரதி தபால் அமைச்சர் சனத் ஜயசூரிய இன்னமும் வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனங்களே இவ்வாறு மீள ஒப்படைக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
பிரதி அமைச்சராக சனத் ஜயசூரிய பதவி வகித்த காலத்தில் அரசாங்கத்தினால் ஏழு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அவற்றில் மூன்று வாகனங்கள் மட்டுமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு வாகனங்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை.
பி.எம்.டபிள்யூ வாகனமொன்று, லேன்ட் லோவர் டிஸ்கவரி ஜீப் ஒன்று, நிசான் சொல்பி ரக இரண்டு மோட்டார் கார்கள் ஆகியன இவ்வாறு ஒப்படைக்கப்படவில்லை.
முஸ்லிம் விவகார மற்றும் தபால் அமைச்சர் எம். எச். அப்துல் ஹாலீம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

Post a Comment

0 Comments