Subscribe Us

header ads

கட்சியின் யாப்புக்கு எதிராக செயற்படுவோருக்கு சட்ட நடவடிக்கை – சிறிலங்கா சுதந்திர கட்சி


கட்சியின் யாப்பு மற்றும் கொள்கைகளுக்கு முரணாக செயற்படுகின்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜெயந்த விடுத்துள்ள அறிக்கைஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்காக இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உள்ளிட்ட பல உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சத்திய கடதாசியின் மூலம் எதிர்தரப்பினருக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்த தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும் இதன் மூலம் ஏற்படும் ஆட்சி மாற்றம் தற்காலிகமானது என்றும், இதனால் மாகாண சபையினதோ, ஏனைய உள்ளுராட்சி மன்றங்களினதோ நிலையற்ற தன்மையை சீர் செய்ய முடியாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments