இன்று கட்சி மாறல்களினால் ஆட்சி மாற்றமடையுமா?
வரலாற்றுச் சான்றுகள் ஏதும் உண்டோ? என பலரும் கேட்கிறார்கள்.உண்மையில் வரலாற்றுச்
சான்று மைத்திரியின் சொந்த ஊரான பொலனருவையில் இருந்தே என்ற வரலாறுகளை அறியும் போது
ஒரு கனம் மைத்திரியின் வெற்றியின் மீது அபரிதமான நம்பிக்கை பீறிட்டுப் பாய்கிறது.
இறைவனின் விளையாட்டைப் பாருங்கள்? 1964 ம் ஆண்டு(சரியாக ஐம்பது வருடங்கள் முன்பு)
பொலனருவையைச் சேர்ந்த சி.பி.டி சில்வா சு.கா இலிருந்து ஐ.தே.க இன் பக்கம் 13 உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு கட்சி
மாறினார்.அவரின் மாறலால் கதி கலங்கிய சு.க அத் தேர்தலில் படு தோல்வியடைந்தது.
இன்றும் அதே ஊரிலிருந்து
ஒரு நபர் அவர் செய்தது போன்றே செய்திருப்பதை அறியும் போது சில திரைப் படக்
காட்சிகளுக்கு உயிரோட்டம் வழங்குவது போன்று உள்ளதல்லவா
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை


0 Comments