Subscribe Us

header ads

மாகாண அமைச்சர் நசீர் ஹாபீஸ் இன் பாதுகாப்பும் விலக்கப்பட்டு விட்டதாமே!

மு.கா அனைத்து உறுப்பினர்களும் கட்சி மாறிய போதும் மு.கா தலைவர் ஹக்கீமின் வார்த்தையினையும் மீறி இரு கிழக்கு மாகாண அமைச்சர்களும் தங்கள் அமைச்சுப் பதவியில் நிலைத்திருக்கிறார்கள்.இதை விட இவர்கள் கட்சி மாறி இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.கட்சியில் இருந்து தலைவரின் வார்த்தையினை புறக்கணிப்பது தலைவரினையும் கட்சியினையும் அவமானப்படுத்துவது மாத்திரமின்றி வேறு சில சந்தேகப் பார்வைகளிற்கும் தீனி போடுவதாய் அமைந்து விடப் போகிறது.

அரசிற்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்கள் பலரினது பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண அமைச்சர் நசீர் ஹாபீஸ் தானும் அரசிற்கு எதிரானவன் போன்று காட்ட தனது பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு மு.கா முடிவினை எதிர்க்கும் தலைவரினை புறக்கனிக்கும் இவர் பாதுகாப்பும் நீக்கப்பட்டால் இது அரசு செய்ததல்ல அல்லது  என்று தான் கூற வேண்டும்.

இன்று மு.கா இன் வருகை இன வாதத்தைத் தூண்ட அரசினால் செய்யப்பட்ட கைங்கரியங்களில் ஒன்று என்ற பேச்சு உலா வர  ஆரம்பித்துள்ளது.இவர்கள் இருவரும்  இராஜினாமா செய்யாமல் இருப்பது மேலும் அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடப் போகிறது.தலைவர் உட்பட மு.கா செய்த தியாகம் இவர்களால் கொச்சைப் படுத்தப்படப் போகிறது.தலைவர் இராஜினாமா செய்வார்கள் என்கிறார்.இவர்களோ கட்சி மாறி விட்டோம் ஆனால் தாங்கள் இராஜினாமா செய்ய மாட்டோம் என்கிறார்காள்.இதில் ஏதோ ஒளிந்திருப்பது புலனாகின்றதல்லவா?


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.



Post a Comment

0 Comments