Subscribe Us

header ads

இலங்கையின் ஜனநாயகம் குறித்து ஒபாமாவுக்கு புதிய நம்பிக்கை!


இலங்கையின் ஜனநாயகம் குறித்து புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

இலங்கையின் சிறந்த எதிர்காலத்திற்கென அண்டைய நாடான இந்தியாவிற்கு பாரிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்க முடியும் என ஒபாமா தெரிவித்துள்ளார். 

இந்த பிராந்தியத்தில் இலங்கை மற்றும் பர்மா போன்ற நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க முடியுமெனவும், அந்நாடுகளில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்ட ஒபாமா புதுடெல்லியில் உரையாற்றிய போது தனது உரையில் இலங்கை தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 

இந்தியாவின் தேர்தல் அனுபவங்களை ஏனைய வலய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒபாமா கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments