கைது செய்யப்பட்ட வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, நீதவான் ரங்க திஸாநாயக்க சந்தேகநபருக்கு பிணை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆனமடு பகுதியில் ஐதேக ஆதரவாளருக்கு அச்சுறுத்தல் விடுத்து ஐதேக அலுவலகத்தை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டார்.
வழக்கு மீண்டும் பெப்ரவரி 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


0 Comments