Subscribe Us

header ads

வீடு மற்றும் வங்கிகளுக்கு கதவே இல்லாத அதிசய கிராமம்.


இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் நெவாஸா தாலுகாவில் உள்ளது சனி ஷிங்னாபூர் கிராமம்.
அந்த கிராமத்தில் வங்கி, வீடுகள் என எதற்கும் கதவு கிடையாது. சனி பகவான் தங்களை பாதுகாப்பார் என்று மக்கள் நம்புவது தான் வீடுகளுக்கு கதவு இல்லாமல் இருப்பதற்கு காரணம். பல தலைமுறையாக இந்த கிராமத்தில் வீடுகளுக்கு கதவே இல்லாமல் உள்ளது.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு சனி பகவான் பக்தர்களின் கனவில் வந்து வீடுகளுக்கு யாரும் கதவை வைக்க வேண்டாம் என்று தெரிவித்தார். நான் உங்களை எல்லாம் பாதுகாக்கையில் கதவுகள் எதற்கு என்று கேட்டார்.
அதனால் அன்றிலிருந்து வீடுகளுக்கு கதவுகள் இல்லாமல் உள்ளது என்று கூறியுள்ளனர். வீடுகள் தவிர்த்து அந்த கிராமத்தில் உள்ள யுகோ வங்கிக்கு கூட பூட்டு இல்லை. வங்கியின் முன் கதவு கண்ணாடியால் ஆனது. ஆனால் அதற்கு பூட்டு கிடையாது.
தெரு நாய்கள் உள்ளே நுழையாமல் இருக்கவே கதவை மூடி வைத்து உள்ளதாக அந்த வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments