Subscribe Us

header ads

குழந்தைக்கு தாயான குரங்கு.... சோறூட்டி, தாலாட்டி வளர்க்கும் அதிசயம் (VIDEO ,PHOTOS)


அரியானா மாநிலத்தில் குரங்கு ஒன்று பெண் குழந்தையை பராமரித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்த சுல்தான் சிங்கின் வீட்டிற்கு ஒரு நாள் குரங்கு ஒன்று வந்தது.
அந்த சமயம் அவரது குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது, வீட்டுக்கு வந்த குரங்கு குழந்தையுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது.
குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது.
சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு 'நானி' என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர்.
அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது.
குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராமரிப்பதிலும் பெற்ற தாயை போலவே நானி நடந்துகொள்கிறது.








Post a Comment

0 Comments