Subscribe Us

header ads

சவுதி மன்னரின் ஜனாஸாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதியாக ஹக்கீம் சவுதி செல்கிறார்.

இன்று காலை சவுதி மன்னர் அப்துல்லா அவர்கள் வபாத்தானது அறிந்ததே.

உலக தலைவர்கள் பலர் தமது இரங்கல் செய்திகளை அறிவித்து வரும் அதேவேளை  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதியாக அவரின் இரங்கல் செய்தியுடன்  அமைச்சர் ஹக்கீம் சவூதி அரேபியா செல்கின்றார்.

இன்னும் சற்று நேரத்தில் அவர் சவுதி விஜயத்தை  மேற்கொள்ளவுள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று நண்பகல் சவூதி அரேபியாவின் தலைநகரான றியாதில் இடம்பெறவுள்ளது.

இதில் பல உலக நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மன்னரின் மறைவையொட்டி கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இரங்கல் செய்திப் பதிவேடொன்று திறக்கப்பட்டுள்ளது.

இதில் தனது தனது இரங்கள் செய்தியினை எழுதுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் ஹக்கீமுன் இன்று காலை 10.45 மணியளவில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது குறித்த பதிவேற்றில் தனது இரங்கல் செய்தியை ஜனாதிபதி எழுதியதுடன் அமைச்சர் ஹக்கீம், தனது பிரதிநிதியாக மன்னரின் ஜனாஸாவில் கலந்துகொள்ள றியாத் செல்லவுள்ளதாகவும் அறிவித்தார்.

Post a Comment

0 Comments