சில மாதங்களுக்கு முன்னர் சென்ற அரசாங்கத்தின் ஆட்சியில் அளுத்கம , பேருவள பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என புதிய ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் நூறு நாட்களுக்கு புதிய அரசின் வாக்குறுதிகளை , பொறுப்புக்களை நிறைவேற்ற காலம் போதாமல் இருக்கும் பட்சத்தில் ஏப்ரில் பொதுத்தேர்தலின் பின்னர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மு.கா வலியுறித்தி உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இராஜாங்க அமைசராக பதவி ஏற்றுள்ள ஹசன் அலி இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூனில் பொதுபலசேனாவினால் நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 80பேர் வரை காயமடைந்தனர் என்று ஹசன் அலி மேலும் சுட்டிக்காட்டினார்


0 Comments