பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தைகளை பொது பல சேனா ஆரம்பித்துள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தம்முடன் இணைந்து போட்டியிட வருமாறு பல அரசியல் கட்சிகள் தமக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மக்களுக்காக வேண்டி தாம் ஒரு சிறந்த முடிவை எடுக்கவுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்தில் எதிர்க் கட்சியின் செயற்பாட்டை பொதுபல சேனாவே முன்னெடுத்தது. தற்போதைய அரசாங்கத்தின் போதும் மக்களின் பக்கம் இருந்து தேவையானதை செய்யத் தயாராகவுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.


0 Comments