திருடர்களையும், ஊழல் பேர்வளிகளையும் கொலைகாரர்களையும் கடந்த அரசாங்கத்தைப் போன்று பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கமும் முனையுமாயின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு முன்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திலுள்ள அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தேரர் இன்றைய சிங்கள ஊடகமொன்றிடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments