Subscribe Us

header ads

வெலே சுதாவின் பணத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு வீடு?


இலங்கை போதைப்பொருள் வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வெலே சுதா எனும் சமந்த குமார வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் ஏற்கனவே கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரிடம் பெறப்பட்டிருக்கும் மேலதிக தகவல்களின் அடிப்படையில் மேலும் ஆறுபேர் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு தொடர்பிருப்பதற்கான தொடர்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன.

குறித்த சந்தேக நபர் கொள்வனவு செய்த வீடொன்று இந்நிதியால் பெறப்பட்டதாக இருக்கலாம் எனும் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் யாராக இருந்தாலும் குற்றவாளியாக காணப்பட்டால் தண்டணை பெற்றுக்கொடுக்கப்படும் என தகவல் வெளியிட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஊடகங்களுடனான சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் பொலிஸ் உயரதிகாரியொருவரை சம்பந்தப்படுத்தி ஏற்கனவே தகவல்கள் உலவ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments