கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று அதிகாலை 3.35 அளவில் கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக வழி ஏற்படுத்தி கொடுத்ததாக பிரசன்ன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
குற்றச்சாட்டு குறித்து உரிய முறைப்பாடு செய்யாத காரணத்தினால் இவ்வாறு விமான நிலையத்தின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
கட்டார் எயார்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஊடாக பிரசன்ன விக்ரமசூரிய அமெரிக்கா பயணம் செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


0 Comments