Subscribe Us

header ads

ஹக்கீம், ராஜித்த, றிசாத் ஊழல் பேர்வழிகள் - ஞானசாரர் குற்றச்சாட்டு

புதிய அரசாங்கம் நியமித்துள்ள தேசிய நிறைவேற்று சபையை வரவேற்கிற போதிலும், அச்சபையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனாரத்தினா மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோர் ஊழல் பேர்வழிகள் என பொதுபல சேனாவின் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த மூவரையும் தேசிய நிறைவேற்று சபையில் இணைத்துக்கொண்டது தவறு. இது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த 3 அமைச்சர்களையும் தேசிய நிறைவேற்று அதிகார சபையில் அனுமதிப்பது பொருத்தமானதல்ல. 

மைத்திரிபால தலைமையிலான அரசாங்கம் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றுவது போன்று மிகவும் வேகமாக செயற்பட்டு வருகின்றது. ஒரு அரசாங்கம் இவ்வாறு வேகமாக செயற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல. சற்று பொறுமையாக செயற்பட வேண்டும். ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாமென்ற எண்ணத்தை குறைத்துக்கொள்ள வேண்டுமெனவும் ஞானசாரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments