மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தம்மை அச்சுறுத்தியதாக, பிரதம நீதியசரர் மொஹான் பீரிஸ் காவற்துறையில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நேற்று இரவு 7.30 அளவில் தமது வீட்டுக்கு வந்த அசாத் சாலி தலைமையிலான குழு ஒன்று, தம்மை அச்சுறுத்தி சென்றதாக தெரிவக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணி அளவில் பிரதம நீதியரசரினால் இந்த முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை உடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக கறுவாத்தோட்டம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் அழைப்பின் பேரிலேயே தாம் அவரது இல்லத்துக்கு சென்றதாக கூறியுள்ளார்.


0 Comments