Subscribe Us

header ads

மைத்திரி யுகத்தில் சிறுபான்மை மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கட்டும்

சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எனும் மகுடத்தை சூடியிருக்கும் அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் எனும் அடிப்படையில் எனது ஆத்மார்த்தமான மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்., 

மேலும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டின் இறைமையை பாதுகாப்பதுடன் ,சகல மக்களுக்கும் சமமான உரிமைகளை பகிர்ந்தளித்து தாய் நாட்டில் ஒற்றுமையையும் நல்லாட்சியையும் உறுதிப்படுத்துவதுடன், முஸ்லிம்களின் மத உணர்வுகளை மதித்து நடப்பவராக எதிர்வரும் காலத்திலும் செயற்படுவார் என நம்புகிறேன்.

ஆதலால், விரோதங்கள் குரோதங்களை மறந்து சகல இன மக்களும் புரிந்துணர்வுடன் வாழ நாட்டின் தலைவர் மைத்திரிபால  சிறிசேன அவர்களும்,ஏனைய அரசியல் தலைவர்களும் வழிவகுக்க வேண்டும். மைத்திரி யுகத்தில் பல்லின மக்களின்வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க வேண்டுவதோடு, எமது தாய் நாடு மென்மேலும் அபிவிருத்தி பெறவும் அனைவரும் உழைக்க வேண்டும்.


மேலும், மைத்திரி யுகத்தில் பங்கேற்று மாற்றம் ஒன்றுக்காய் வித்திட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸர் முஸ்தபா,ஹுனைஸ் பாரூக்,அஷாத் சாலி,முஜீபுர் ரஹ்மான் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,கட்சிகளின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு- இன்ஷா அல்லாஹ், இதே ஒற்றுமை இனிவரும் காலங்களிலும் தொடர்வதோடு, முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காய் அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபடவும் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

ஆதலால்,இன நல்லுறவு மேலோங்கி, விரோதங்கள் குரோதங்களை மறந்து சகல இன மக்களும் புரிந்துணர்வுடன் வாழ நாட்டின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களும்,ஏனைய அரசியல் தலைவர்களும் வழிவகுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

ஊடகப் பிரிவு

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.

Post a Comment

0 Comments