2015.01.23 வெள்ளிக்கிழமை மாலை புத்தளம் மக்கள் பணிமனையில் மக்கள் மறுமலர்ச்சி
முன்னணயின் பிரதி தலைவர் முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சுபியான் மௌலவி
தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள
பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் தேர்தல் தொகுதியில் புத்தளம் மக்கள் எதிர்பாக்கின்ற
ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பெற்றுக்கொள்வதற்கு எமது கட்சி எவ்வாறான பங்களிப்பை
ஆற்றுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக புத்தளம் மக்கள் இழந்து நிற்கின்ற
பாராளுமன்ற உறுப்புரிமையை இம்முறை எப்பாடுபட்டாவது பெற வேண்டும் என்பதற்கான
முயற்சி பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட
முஸ்லிம்களின்பெரும்பாலான வாக்குகள் புத்தளத்தில் பதியப்பட்ட நிலையில் இம்மக்களின் வாக்குகள்
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கணிசமான பங்களிப்பை செய்து வெற்றியை தீர்மானிக்கும்
காரணியாக அமையும்.
எனவே புத்தளம் மக்களின் கனவை நனவாக்க
எமது கட்சி முதற்கட்டமாக தேசிய கட்சிகளின் புத்தளம் தொகுதி அமைப்பாளர்களையும், அரசியல்
பிரதிநிதிகளையும்,மத்திய குழுக்களையும்,அரசியல் விழிப்புணர்வு மன்றங்களையும்
சந்தித்து கலந்து உரையாடுவதற்கு தீர்மானித்துள்ளது.
மேலும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை
உள்வாங்குவது மற்றும் அரசியல் சமுக முன்னேற்றத்தில் ஈடுபடும் ஆர்வலர்களை
ஒன்றிணைத்து ஓர் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதுடன் எதிர்வரும் மார்ச் மாதம்
நடைபெறவுள்ள ஆறாவது பேராளர் மாநாட்டை விமர்சையாக நடாத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது..
எஸ்.எம்.மணாப்தீன்


0 Comments