புதிய ஜனநாயக முன்னணியின் அபேட்சகர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து இன்று ஏழு பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரப் பிரிவு அறிவித்துள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன கலந்துகொள்ளும் இன்றைய பிரதான கூட்டங்கள் நிவித்திகல, அம்பிலிப்பிட்டிய, தெவிநுவர, காலி, களுத்தறை, மொரட்டுவ, மருதானை ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன.
பொது எதிரணியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று இரவு கொழும்பு, மருதானை டவர் மண்டபத்திற்கு முன்னாள் இடம்பெறவுள்ளதாகவும் பொது எதிரணியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது


0 Comments