பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் அடுத்தடுத்த படுக்கைகளில் பிறந்து திருமண பந்தத்தில் இணைந்த ஜோடியொன்று, தனது 60 ஆவது பிறந்த நாளை திங்கட்கிழமை ஒன்றாக கொண்டாடவுள்ளது.
1955 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி டெவொனில் எக்ஸெட்டரிலுள்ள மொவ்பிரே மகப்பேற்று மருத்துவமனையில் பிறந்த டேவ் ஓக்லகன் மற்றும் ஜேன் ஹம் மொன்ட் ஆகியோரே இந்த அதிசய ஜோடியாவர்.
பிறந்த பின் பிரிந்த டேவும் ஜேனும் தமது 17 ஆவது வயதில் ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது.
இதனையடுத்து காதல் வசப்பட்ட மேற்படி ஜோடி, தமது 21 ஆவது வயதில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு 22 ஆவது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.
38 வருட காலமாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு லைடியா (29 வயது) மற்றும் இமோகென் (25 வயது) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.


0 Comments