ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியானதை முன்னிட்டு சிலாபம் நகரம் முழுவதும் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாட்டங்களிலும் ஊர்வளங்களில் ஈடுபட்டிருந்தனர்.. பட்டாசுகள் கொழுத்தி வீதிகளில் வாகன ஊர்வளங்கள் சென்று மைத்திரி பால சிறிசேனாவுக்கு தமது தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து. இன்று காலை 10.1.2015 ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சிலாபம் நகர சபைக்கு செந்தமான கடைத் தொகுதிகள் மற்றும். முச்சக்கர வண்டி தரிப்பிடம் போன்றவற்றில் தொழில் செய்வர்களை உடனடியாக வெளியேருமாறு பணித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கைகலப்பினால் சிலாபம் நகர மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. கடைத் தொகுதிகள் இன்று மூடப்பட்டுள்ளன. நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிலாபம் பொலிஸார் நகர மத்தியில் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments